திங்கள், 6 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Updated : வியாழன், 28 நவம்பர் 2024 (05:52 IST)

சபரிமலையில் ஆர்க்கிட் மலர்கள் பயன்படுத்த கூடாது: தேவசம் போர்டுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தல்..!

சபரிமலையில் உள்ள சன்னிதானத்தில் ஆர்க்கிட் மலர்கள் மற்றும் இலைகள் அலங்காரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என தேவசம்போர்டுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
 
பாரம்பரிய வழக்கப்படி இயற்கையான பூக்களை மட்டுமே அலங்காரத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்றும் அவற்றை தினமும் மாற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் இந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
 
மேலும் பக்தர்கள் உடைக்கும் தேங்காய்களை கொப்பரை தொழிலாளர்கள் சட்டவிரோதமாக சேகரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சன்னிதானம் நிர்வாக அதிகாரி மற்றும் தேவசம் விஜிலன்ஸ் ஆகியோர்களுக்கு தெரிவித்துள்ளது.
 
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் ஏராளமானவர் வந்து கொண்டிருக்கும் நிலையில், கேரள ஐகோர்ட் பக்தர்களுக்கு பல்வேறு ஆலோசனை வழங்கி வரும் நிலையில், இந்த ஆலோசனைகளை இன்று வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
Edited by Mahendran