1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 8 மே 2020 (18:47 IST)

சென்னையிலிருந்து கேரளா வந்த நபருக்கு கொரோனா: பினராயி விஜயன் தகவல்

இந்தியாவிலேயே கேரள மாநிலத்தில் தான் முதல் கொரோனா வைரஸ் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார் என்பதும், அதனை அடுத்து கேரளாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்தது என்பதும், ஒரு கட்டத்தில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் தான் அதிகமாக கொரோனா நோயாளிகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்கள் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக கேரள மாநிலத்தில் கொரோனா பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கடந்த 3 நாட்களாக கேரள மாநிலத்தில் புதிதாக கொரோனா நோய் தொற்று ஏற்பட்டவர்கள் யாருமில்லை என்பதும் தற்போது 16 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களும் விரைவில் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்பதால் கேரள மாநிலம் விரைவில் கொரோனா இல்லாத மாநிலமாக உருவாகும் என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது 
 
இந்த நிலையில் சென்னையில் இருந்து கேரளா வந்த நபர் ஒருவருக்கு கொரோனா நோய் பாதிப்பு இருப்பதாக கேரள முதல்வர் பினரயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார். அந்த நபர் சென்னையில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் வந்திருப்பதாகவும் அவருக்கு தற்போது கொரோனா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சென்னையில் இருந்து கேரளா வருபவர்கள் அனைவரும் தனிமைப்படுத்துதலை கடைபிடிக்க வேண்டும் என்று கேரள அரசு கேட்டுக்கொண்டுள்ளது