1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 14 ஜூலை 2021 (09:34 IST)

கேரள கவர்னர் திடீர் உண்ணாவிரதம்: பரபரப்பு தகவல்!

கேரள கவர்னர் திடீர் உண்ணாவிரதம்: பரபரப்பு தகவல்!
இன்று கேரள கவர்னர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளதை அடுத்து கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கேரளாவில் கடந்த சில வருடங்களாக வரதட்சணை கொடுமை அதிகரித்து வருவதாகவும் வரதட்சணை கொடுமை காரணமாக மரணங்கள் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இந்த நிலையில் வரதட்சணை கொடுமைக்கு எதிராகவும், பெண்கள் பாதுகாப்புக்காகவும் கேரளாவில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. ஒரு சில காந்திய இயக்கங்கள் சார்பில் இன்று மாலை நான்கு முப்பது மணிக்கு திருவனந்தபுரத்தில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது 
 
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தானும் பங்கேற்க உள்ளதாக கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் அவர்கள் தெரிவித்துள்ளார். மாலை நான்கு முப்பது மணிக்கு தொடங்கும் இந்த உண்ணாவிரதம் முடியும் வரை தான் பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது