இன்று வெளியாகிறது எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு: கேரள அரசு அறிவிப்பு!

sslc
இன்று வெளியாகிறது எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு: கேரள அரசு அறிவிப்பு!
siva|
கேரளாவில் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு இன்று வெளியாக இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது

கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட பல மாநிலங்களில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. ஆனால் கேரளாவில் கொரோனா பரவல் இடையேயும் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த கேரள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது ’கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு முடிவு இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியாகிறது என்றும் இந்த முடிவை இணையதளங்களில் மாணவ மாணவிகள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறினார்

மேலும் இந்த தேர்வை 4.12 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதி உள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார். கேரளாவில் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியாக இருப்பதை அடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இதில் மேலும் படிக்கவும் :