செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 18 மே 2021 (10:30 IST)

முதல்வராக பதவியேற்கும் பினராயி விஜயன் - 500 பேருக்கு மட்டுமே அனுமதி!

பினராயி விஜயன் கேரள முதலமைச்சராக 2 வது முறையாக வரும் 20 ஆம் தேதி பதவி ஏற்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. 

 
கேரளத்தில் இடதுசாரி கூட்டணிக்கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில் கேரள முதல்வராக பினராஜி விஜயன் இரண்டாம் முறை பதவியேற்க உள்ளார். திருவனந்தபுரம் சென்ட்ரல் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், ஆளுநர் முகமது ஆரிஃப் கான், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.
 
கொரோனா பரவல் காரணத்தால் பதவியேற்பு நிகழ்ச்சியில் 500 மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கேரளாவின் வரலாற்றிலேயே எந்தவொரு கட்சியும் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி செய்ததில்லை. இதுவே முதல்முறையாகும்.