1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 18 மே 2021 (08:44 IST)

3 கோடி தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய டெண்டர்… கேரள அரசு அறிவிப்பு!

3 கோடி தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய டெண்டர்… கேரள அரசு அறிவிப்பு!
கொரோனா தடுப்பூசிகளை வாங்க கேரள அரசும் உலகளாவிய டெண்டர் அறிவித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலை மிக மோசமான விளைவுகளை இந்தியா முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாநில அரசுகள் உலகளாவிய ஒப்பந்தத்தின் படி கொரோனா தடுப்பூசிகளை வாங்க முடிவு செய்துள்ளது. தமிழக அரசு இதை ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில் இப்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் தங்கள் மாநிலத்துக்காக 3 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க டெண்டருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.