வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 17 மே 2021 (17:59 IST)

ஆந்திராவில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு: முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு!

ஆந்திராவில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைவதால் அடுத்து மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டித்து அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார் 
 
ஆந்திராவில் மே மாதம் மூன்றாம் தேதி ஊரடங்கு உத்தரவு இரண்டு வாரங்களுக்குள் பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கில் காலை 6 மணி முதல் 12 மணிவரை கடைகள் உணவகங்கள் திறந்திருக்கலாம் என்றும் 12 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது
 
இந்த நிலையில் இரண்டு வார ஊரடங்கு காலம் இன்றுடன் முடிவடைந்தது. இதனை அடுத்து மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை அடுத்து மே 31ம் தேதி வரை ஆந்திராவில் ஊரடங்கு அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க
 
ஆந்திராவில் தினசரி 20 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதும் நூற்றுக்கணக்கானோர் தினமும் கொரோனாவால் பலியாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது