பக்ரீத் பண்டிகைக்காக ஊரடங்கில் தளர்வு: கேரள அரசுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை!
பக்ரீத் பண்டிகைக்காக கேரளாவில் ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இந்த தளர்வுகளை திரும்ப பெற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சுப்ரீம் கோர்ட் செல்வோம் என்றும் மருத்துவர் சங்கம் அறிக்கை வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
கேரளாவில் கோவிட் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கேரல அரசு எடுத்துள்ள இம்முடிவு வேதனை அளிக்கிறது. காஷ்மீர், உத்தர பிரதேஷ், உத்தராகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்கள் பொது பாதுகாப்பு என்ற உணர்வுடன் பாரம்பரியமான யாத்திரைகளை ரத்து செய்துள்ளது. கல்வி அறிவு அதிகம் பெற்ற கேரளா பிற்போக்கு முடிவு எடுத்தது துரதிர்ஷ்டவசமானது. இந்த உத்தரவை வாபஸ் பெறாவிட்டால் அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் கோவிட் பிரச்சனையை காரணம் காட்டி உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடத்த திட்டமிட்டிருந்த கன்வர் யாத்திரையை ரத்து செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கேரளாவில் பக்ரீத் பண்டிகைக்காக ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் சென்றால் அரசுக்கு எதிராகவே தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது