வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 14 ஜூலை 2021 (16:45 IST)

கேரளாவில் தொடர்ந்து அதிகமாகும் கொரோனா தொற்று… ஐதராபாத்தில் முகாமிடும் மலையாள சினிமா!

கேரளாவில் மட்டும் இன்னும் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வராமல் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே உள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பரவல் மெல்ல மெல்ல குறைந்து இயல்பு நிலைக்கு மாநிலங்கள் திரும்பியுள்ளன. ஆனால் கேரளாவில் மட்டும் இன்னும் பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. இந்தியாவிலேயே தற்போது அதிக பரவல் எண்ணிக்கை உள்ள மாநிலமாக கேரளா உள்ளது. நேற்று எண்ணிக்கை 14000 ஐ தாண்டியது.

இந்நிலையில் அங்கு படப்பிடிப்புகள் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளதால் மலையாள சினிமா படப்பிடிப்புகள் ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டு வருகின்றன.