ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 24 ஜனவரி 2019 (09:28 IST)

செம போதைல செல்பி: 800 அடி பள்ளத்தில் விழுந்து காலி

செல்பி மோகத்தால் இந்திய ஜோடி ஒன்று 800 அடி மலை உச்சியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி தற்பொழுது வெளியாகியுள்ளது.
உலகமெங்கும் வயது வித்தியாசம் இன்றி இன்று பரவியுள்ள ஒரு வியாதி செல்பி. எதை பார்த்தாலும், யாரை பார்த்தாலும் உடனே மொபைலை எடுத்து செல்பி எடுப்பது இப்போது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. செல்பி எடுக்கும்போது ஏற்படும் உயிரிழப்புகளும் அதிரித்த வண்ணம் உள்ளது.
 
கேரளாவை சேர்ந்த தம்பதியர்களான விஷு விஸ்வநாத் மற்றும் மீனாட்சி அமெரிக்காவில் வசித்து வந்தனர். விஷூ விஸ்வநாத் அங்குள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் த்ரில்லான இடங்களுக்கு சென்று அங்கு செல்பி எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிடுவது ரொம்ப பிடிக்குமாம்.
 
அப்படி கடந்த அக்டோபர் மாதம் கலிஃபோர்னியாவில் உள்ள யோசெமைட் தேசிய பூங்காவுக்கு சுற்றுலா சென்று 800 அடி மலைப்பகுதியின் நுனியில் ஆபத்தான நிலையில் செல்பி எடுத்துள்ளனர். அப்போது கால் தவறி கீழே விழுந்ததில் இருவரும் சம்பவ இடத்திலே பலியாகினர். இச்சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
 
இருவரது உடலையும் பிரேத பரிசோதனை செய்தலில் இவர்கள் செம போதையில் இருந்தது தெரிய வந்துள்ளது. கண்ணுமுன்னு தெரியாமல் குடித்ததும் இல்லாமல் ஆபத்தை உணராமல் 800 அடி மலையில் செல்பி எடுக்கபோய் உயிரையே விட்டுள்ளனர் இவர்கள்.