1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 8 ஜனவரி 2019 (17:52 IST)

போதையில் கார் ஓட்டிய பிரபல நடிகர் ! துரத்தி பிடித்த பொதுமக்கள்... என்ன ஆச்சு...?

சென்னை சூளைமேட்டில் போதையில் கார் ஓட்டிச் சென்ற போது பொது மக்கள் மீது விபத்து ஏற்படுத்த முயன்றதாக பிரபல இயக்குநர் பி.வாசுவின் மகன் சக்தி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சந்திரமுகி, சின்னத்தம்பி போன்ற படங்களை இயக்கியவர் பி. வாசு. இவரது மகன் சக்தி. சில படங்களில் நடித்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்சியின் மூலம் டிரிக்கர் சக்தி என்று பிரபலம் ஆனார்.
 
இன்று சூளைமேட்டில் உள்ள இளங்கோவன் தெருவில் , இன்று காலையில் போதையில் வேகமாக கார் ஓட்டி வந்த சக்தி , பொதுமக்கள் மீது மோத முயன்றதாக தெரிகிறது.
 
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காரை துரத்திச்சென்றனர் . ஒருவழியாக காரை நிறுத்தி உள்ளே பார்த்தால் சக்தி போதையில் இருந்துள்ளார். உடனடியாக மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
 
இதனையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர், சக்தியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர் மீது வழக்கிப் பதிந்துள்ளதாக தெரிகிறது. இச்சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.