புதன், 5 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : செவ்வாய், 8 ஜனவரி 2019 (11:35 IST)

போதைப் பொருள் கொடுத்து கற்பழிப்பு: பிரபல நடிகருக்கு முன் ஜாமீன்

பிரபல பாலிவுட் நடிகர் அலோக்நாத் மீது பெண் தயாரிப்பாளரும் கதை ஆசிரியருமான வின்டா நந்தா , பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.  



19 ஆண்டுகளுக்கு முன்பு அலோக்நாத்,  விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற தனக்கு, மதுவில் போதை பொருள் கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக வின்டா நந்தா குற்றம் சாட்டினார்.  அதன் பிறகு அவருடைய வீட்டுக்கு தன்னை வரவழைத்து மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்தார் என்றும் வின்டா நந்தா கூறினார். இது தொடர்பாக மும்பை போலீசிலும் அலோக்நாத் மீது புகார் அளித்தார். இது தொடர்பாக மும்பை ஓஷிவாரா போலீசார் அலோக்நாத் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்தனர்.  இதனால் அலோக்நாத் கைது செய்யப்படலாம் என பரபரப்பு ஏற்பட்டது. 


 
இதையடுத்து மும்பை செசன்ஸ் நீதிமன்றத்தில்  முன்ஜாமீன் கோரி அலோக்நாத் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது நீதிபதி விசாரணை நடத்திய பின்னர், அலோக்நாத்க்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.