திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (22:25 IST)

கனடா :மாணவிக்கு லாட்டரி மூலம் ரூ. 290 கோடி பரிசு

canada
கனடா நாட்டைச் சேர்ந்த ஒரு மாணவிக்கு லாட்டரி மூலம்ரூ.290 கோடி பரிசு பெற்றுள்ளார்.

கனடா நாட்டில் பிரதமர்  பிரதமர் ஜஸ்டின் துரூடோ தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள கல்லூரியில் படித்து வரும் மாணவி ஜூலியட் (18). இவர், தன் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு வணிக வளாகத்திற்குச் சென்று பொருட்கள் வாங்கினார்.

அவர், தன் தாத்தாவுடன் வந்திருந்ததால், அவரது அறிவுறுத்தலின்படி லாட்டரி சீட்டுகள் வாங்கினார்.

இவர்களின் பக்கத்து வீட்டுக் காரருக்கு லாட்டரியில் பரிசு விழுந்தது.  அப்போதுதான் தன் பேத்தியும் லாட்டரி வாங்கியது அவருக்கு ஞாபகம் வந்தது.

இந்த நிலையில், பேத்தி வாங்கிய லாட்டரி பற்றி விசாரித்தார். இதற்கு ரூ.290  கோடி பரிசு விழுந்துள்ளது தெரிந்தது.

இதை தன் பேத்தி மற்றும்குடும்பத்தினரும் கூறியதும் எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.