1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Kerala announce lockdown in weekends

கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! – ஊரடங்கு உத்தரவு!

Kerala
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் கடந்த மாதத்தில் உச்சத்தை அடைந்த நிலையில் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது கோரொனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் அனைத்து மாநிலங்களிலும் இயல்பு நிலை மெல்ல திரும்பி வருகிறது.

இந்நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் எதிர்வரும் சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கத்தை தொடர்ந்து விடுமுறை நாட்களில் முழு ஊரடங்கு விதிப்பது குறித்த அறிவிப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
இன்றும் விலை உயர்ந்த தங்கம்: எவ்வளவு தெரியுமா?