புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (12:00 IST)

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து: குடியரசு தலைவர் அறிக்கை

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

370-வது சட்டப்பிரிவை நீக்கும் உத்தரவு உடனே அமலுக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட அரசியல் சட்டத் திருத்தங்கள் ஜம்மு காஷ்மீருக்கும் பொருந்தும் என குடியரசு தலைவர் தெரிவித்தார். இதனால் காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது.