வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2019 (11:00 IST)

டெங்கு காய்ச்சலால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு: திடுக்கிடும் தகவல்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

’எடிஸ்-எஜிப்டை’ வகை கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலுக்கு நாடு முழுவதும் இதுவரை 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி, இந்தியாவில் கர்நாடகத்தில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது, அங்கு இதுவரை 1,400 க்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் திடுக்கிடும் தகவல் என்னவென்றால் கர்நாடகாவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு உள்ளது என்பது தான். கடந்த 7 மாதங்களில் மட்டும் தமிழகத்தில் 1,200 க்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் என்ன? என ஆராய்ந்த போது, கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகியுள்ளன என தெரியவந்துள்ளது.

இது குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி, டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் தற்போது கட்டுப்பாட்டுக்குள் தான் உள்ளது. இந்த விவகாரத்தில் அனைத்து துறைகளிடமும் ஒருங்கிணிந்து சுகாதாரத் துறை செயல்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.

மேலும், பயனற்ற பொருட்களை முறையாக அகற்ற வேண்டும் எனவும், அதில் மழை நீரை தேக்கிவைக்க கூடாது எனவும் மக்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.