திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 8 அக்டோபர் 2022 (09:11 IST)

இனி திப்பு எக்ஸ்பிரஸ் இல்ல.. உடையார் எக்ஸ்பிரஸ்..! – ரயில் பெயர் மாற்றத்தால் சர்ச்சை!

Train
கர்நாடகாவில் இயங்கி வந்த திப்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயரை மத்திய அரசு மாற்றியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் பாஜக கட்சியின் ஆட்சி நடந்து வரும் நிலையில் அவ்வபோது அங்கு மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் ஹிஜாப் விவகாரம் சர்ச்சையானது. அதை தொடர்ந்து பாடப்புத்தகத்தில் சாவர்க்கர் குறித்த பாடம் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது கர்நாடகாவில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயர் மாற்றப்பட்டுள்ளது சர்ச்சையில் சிக்கியுள்ளது. கர்நாடகாவில் மைசூரு – பெங்களூர் இடையே செயல்படும் ‘திப்பு எக்ஸ்பிரஸ்’ ரயிலின் பெயரை மத்திய அரசு தற்போது ‘உடையார்’ எக்ஸ்பிரஸ் என பெயர் மாற்றம் செய்துள்ளது.

இவ்வாறு திப்பு சுல்தானின் பெயர் மாற்றப்பட்டுள்ளது வெறுப்பு அரசியலின் காரணமாகவே என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

Edited By: Prasanth.K