1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (12:59 IST)

எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் மீது வழக்கு: கர்நாடக அரசு அதிரடி

edappadi
முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் உள்பட 8 பேர் மீது கர்நாடக அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் குடியிருப்பு கட்டுவதில் செய்த ஊழல் வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினர் ராமலிங்கம் என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது
 
அதுமட்டுமின்றி முன்னாள் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் அவரது மகன் உள்பட 8 பேர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினர், முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் மகன் உள்பட பலர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.