வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 7 பிப்ரவரி 2022 (10:26 IST)

ஹிஜாப் அணிந்து வந்தால் தனி அறை! – கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு!

கர்நாடகாவில் அரசு கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர கல்லூரி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து மாணவிகள் ஹிஜாபுக்கு ஆதரவாக நூதன போராட்டங்கள் மேற்கொண்டதும், அவை சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தின.

இந்நிலையில் உடுப்பி அரசு கலைக் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அனுமதி அளித்துள்ளது. அதேசமயம் ஹிஜாப் அணிந்த மாணவிகள் தனி அறையில் அமர வைக்கப்படுவார்கள் என்றும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.