1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 13 மே 2023 (12:01 IST)

’கிங் மேக்கர்’ குமாரசாமி பின்னடைவு.. பாஜகவில் இருந்து விலகிய ஜெகதீஷ் ஷெட்டர் பின்னடைவு.

கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்க குமாரசாமி தான் உதவ வேண்டும் என்றும் அங்கு தொங்கு சட்டசபை தான் நிலவும் என்றும் கர்நாடகத்தில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை கிங்மேக்கர் குமாரசாமி தான் முடிவு செய்வார் என்றும் கூறப்பட்டது. 
 
ஆனால் தற்போது முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி அறுதிபெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது. மேலும் குமாரசாமியின் மத சார்பற்ற ஜனதா தளம் கட்சி 27 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தாலும் அக்கட்சியின் தலைவர் குமாரசாமி பின்னடைவில் உள்ளார். 
 
அதேபோல் கடைசி நேரத்தில் பாஜகவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அக்கட்சியில் இருந்து விலகிய ஜெகதீஷ் ஷெட்டர் என்பவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து போட்டியிட்ட நிலையில் அவரும் பின்னடைவில் உள்ளார் என்று கூறப்படுகிறது. 
 
குமாரசாமியின் மகன் நிகில் மட்டும் முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. சற்று முன் வெளியான தகவலின் படி காங்கிரஸ் 116 தொகுதிகளிலும் பாஜக 76 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 27 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran