1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 12 மே 2023 (19:26 IST)

தென்னாப்பிரிக்காவில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் கர்நாடகாவில் பயன்படுத்தப்பட்டதா...?

தென் ஆப்பிரிக்க தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்கு இயந்திரங்கள் தான் சமீபத்தில் நடந்த கர்நாடக மாநில தேர்தலில் பயன்படுத்தப்பட்டதாக வெளியான செய்திக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 
 
மே 10ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் 224 தொகுதிகளுக்கும் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தற்போது போலீஸ் பாதுகாப்புடன் உள்ள நிலையில் இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏற்கனவே தென்னாப்பிரிக்காவில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் என்றும் மறு மதிப்பீடு மற்றும் மறு சரிபார்ப்பு செய்யாமல் கர்நாடக தேர்தலில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
 
இது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்த நிலையில் ’தென்னாப்பிரிக்கா தேர்தலுக்கு மின்னணு வாக்கு பதிவு எதையும் இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பவில்லை என்றும் அந்நாட்டு தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்றும் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலமாக இதனை சரி பார்த்துக் கொள்ளலாம் என்றும் விளக்கம் அளித்துள்ளது.
 
Edited by Siva