திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 13 மே 2023 (10:20 IST)

உடனே பெங்களூர் வர காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு உத்தரவு.. குதிரை பேரத்தை தடுக்க ஹெலிகாப்டர்..!

கர்நாடக மாநிலத்தில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகுத்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் 27 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பதும் மற்றவை 5 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாரதிய ஜனதா கட்சியை தற்போது 79 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால் மதச்சார்பற்ற ஜனதா கட்சி மற்றும் மற்றவைகளை சேர்த்து ஆட்சி அமைக்க முயற்சி செய்யும்.
 
அது மட்டும் இன்றி காங்கிரஸ் எம்எல்ஏக்களை குதிரை பேரம் நடத்தவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர்கள் உடனடியாக பெங்களூருக்கு வர காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது. மேலும் பெங்களூரில் இல்லாத வேட்பாளர்களை அழைத்து வர ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran