கர்நாடக சட்டமன்ற தேர்தல்: தனிப்பெரும்பான்மை பெறுகிறது காங்கிரஸ்!
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் முன்னணியில் இருப்பதாகவும் தனி பெரும்பான்மை அமைக்கும் அளவுக்கு அந்த கட்சியை வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சற்று முன் வெளியான தகவலின் படி காங்கிரஸ் கட்சியை 117 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 113 இடங்கள் இருந்தால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் காங்கிரஸ் கட்சியை தற்போது முன்னிலையில் இருக்கும் தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சியை 76 தொகுதிகளிலும் மதசார்பற்ற ஜனதா கட்சி 27 தொகுதிகளிலும் மற்றவை நான்கு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது முதல் சுற்று எண்ணிக்கையின் முன்னிலை நிலவரம் தான் என்பதும் இனிவரும் சுற்றுகளில் நிலைமை மாறுமா என்பதையும் ஒரு திறந்து பார்ப்போம்.
Edited by Mahendran