செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Siva
Last Modified: வெள்ளி, 12 மே 2023 (19:13 IST)

கருத்துக்கணிப்புகளால் அதிருப்தி - திடீர் பயணமாக சிங்கப்பூர் சென்ற முன்னாள் முதல்வர்..!

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் கருத்துக்கணிப்பு தனக்கு சாதகமாக வராததால் மன உளைச்சலுக்கு ஆளான கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி சிங்கப்பூருக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. 
 
கடந்த பத்தாம் தேதி கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் நாளை அந்த வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் தேர்தல் முடிந்ததும் கருத்துக்கணிப்பு வெளியான நிலையில் அதில் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் 20 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் அது மட்டும் இன்றி காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. 
 
இதனை அடுத்து மன உளைச்சலுக்கு ஆளான குமாரசாமி குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்று இருப்பதாகவும் அவர் சில நாட்கள் கழித்து இந்தியா திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva