1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (20:48 IST)

மோடி மெளனம் காப்பது ஏன்? கமல் கேள்வி

ரபேல் ஊழல் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. ரபேல் மோசடியில் மோடிக்கு நேரடி தொடர்பு உள்ளதை பிரான்ஸ் முன்னாள் அதிபர் அம்பலப்படுத்தி விட்டார். 
 
மேலும் ரபேல் விமான பேரத்தை ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனில் அம்பானிக்கு தருமாறு இந்திய அரசு கேட்டுக் கொண்டதால்தான் அந்த ஒப்பந்தம் ரிலையன்ஸுக்குப் போனதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார். 
 
இது குறித்து காங்கிரஸ் பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. மோடியும், நிர்மலா சீதாரமனும்தான் ரபேல் ஊழலில் முக்கிய 2 குற்றவாளிகள் எனவும் வெளிப்படையாக விம்ர்சன செய்து வருகிறார் ராகுல் காந்தி. 
 
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கம் இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியது பின்வருமாறு, ரபேல் ஒப்பந்தம் பற்றி அரசு தனது மௌனத்தை கலைக்க வேண்டும். ஒப்பந்தத்தை பற்றி உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். 
 
அரசு தவறு செய்ததாக நான் கூறவில்லை. ஆனால் அந்த சந்தேகம் உள்ளது. மக்களின் சந்தேகத்தை அரசு போக்க வேண்டும். இதில் வெளிப்படைத்தன்மையை அரசு கடைபிடிக்க வேண்டும். மோடி இதில் அமைதியாக இருக்க கூடாது என்று கமல் கேட்டுக்கொண்டுள்ளார்.