1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By சினோஜ்கியான்
Last Updated : திங்கள், 21 அக்டோபர் 2019 (18:44 IST)

’கல்லா கட்டிய’ கல்கி ஆசிரமம்... ஐடி சோதனை நிறைவு ! கலக்கத்தில் 'கல்கி பகவான் & கோ'

புகழ்பெற்ற கல்கி பகவானுக்கு சொந்தமான 40 ஆசிரமங்கள் மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடைபெற்று வந்த நிலையில் 5 ஆம் நாளான இன்று ஐடி எனப்படும்  வருமான வரித்துறையினரின் சோதனை நிறைவடைந்தது. இதில் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடிக் கணக்கான பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற ஆன்மீக ஆசிரமங்களில் கல்கி பகவான் ஆசிரமும் ஒன்று. ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள இந்த ஆசிரமத்திற்கு சென்னை உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் 40 கிளைகள் உள்ளன.
கடந்த 16 ஆம் தேதி பெங்களூர் ,தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும்  கல்கி பகவான்  அமைப்புக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத பணம் நகைகள் ஆவணங்கள் உள்ளதை கண்டு பிடித்தனர்.
இரண்டாவது நாளும்  ஐடிதுறையினரின் அதிரடி சோதனை தொடர்ந்த நிலையில் சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் நேற்று முந்தினம்  நடைபெற்ற 3வது நாள் சோதனையின்போது,  ரூ. 44 கோடி பணத்தை பதுக்கியதையும், ரூ. 500 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்ததுள்ளதையும் ஐடி துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
 
மேலும், கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் ரூ. 500 கோடி மதிப்பிலான ரொக்கம் பறிமுதல் செய்துள்ளது ஐடிதுறை.
இந்நிலையில், 5 வது நாளாக  இன்று ஐடி எனப்படும்  வருமான வரித்துறையினரின் சோதனை நிறைவடைந்தது. இதில் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கோடிக் கணக்கான பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கல்வி பகவான், தன்னை கடவுள் அவதாரம் என அறிவித்துவிட்டு , இப்படி அரசை ஏமாற்றி வரி ஏய்ப்பில் ஈடுபட்டு  பல நூறு கோடிக்கணக்கான சொத்துக்களையும், பொருட்களையும் , ஆவணங்களையும் பதுக்கி வைக்க காரணம் என்ன ?அதற்கான அவசியம் என்ன ? என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள்  பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இத்தனை கோடி ரூபாய்களுக்கான வரிகளை ஏய்ப்பில் ஈடுபட்டுள்ள கல்கி பகவான் மற்றும்  இந்த அமைப்புகளையும் , கல்கிக்கு வெளிநாட்டில் உள்ள பல நிறுவனங்களையும் கட்டுமான நிறுவனங்களையும் நிர்வகித்து வரும் கல்கியின் மகன் கிருஷ்ணன் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்வார்களா எனவும் நாடு முழுவதும் இருந்து மக்கள் பலத்த கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.