செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 17 ஏப்ரல் 2019 (11:13 IST)

ரூ.1,500 கோடிய எப்ப கொடுப்பீங்க எஸ்பிஐ? நிதி நெருக்கடியில் ஜெட் ஏர்வேஸ்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இதனால், கடந்த மாதம் எஸ்பிஐ தலைமையிலான குழு ஜெட் ஏர்வேஸ் நிர்வாக பொறுப்பை ஏற்றது. 
 
புதிய முதலீட்டாளர் கிடைக்கும் வரை நிறுவனத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.1,500 கோடியை முதலீடு செய்வதென அப்போது முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்தத் தொகை இதுவரை விடுவிக்கப்படவில்லை. 
 
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தற்போது 7 விமானங்களை மட்டுமே இயக்குகிறது. மற்ற விமானங்கள் அனைத்துமே குத்தகை பாக்கி காரணமாக தரை இறக்கப்பட்டுள்ளன. 
 
இந்நிறுவனத்தின் பைலட்டுகள், இன்ஜினீயர்களுக்கு 2018 டிசம்பர் வரைதான் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர பிற நிலை பணியாளர்களுக்கு தற்போது மார்ச் மாத ஊதியமும் வழங்கப்படவில்லை.
 
இதனால், எஸ்பிஐ கொடுப்பதாக் சொன்ன ரூ.1,500 கோடிக்காக காத்திருக்கிறது ஜெட் ஏர்வேஸ்.