புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : திங்கள், 21 அக்டோபர் 2019 (17:33 IST)

’தபால் சேவை’யை நிறுத்திய பாகிஸ்தான் : இந்தியா கண்டனம் !

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா என்ற பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்திய ராணுவ வீரர்கள் இருவர் மற்றும் அப்பகுதில் வசித்த ஒருவர்  கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக பாகிஸ்தாஸ் ராணுவத்துக்கு எதிராக இந்திய ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 10பேர் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்தார். இதை பாகிஸ்தான் ராணுவத்தினர் மறுத்துள்ளனர்.
 
இந்நிலையில்,காஷ்மீரில் இந்தியா  - பாகிஸ்தான் நாட்டு எல்லைப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
 
இந்நிலையில்,   பாகிஸ்தான் அரசு இந்தியாவுடனான தபால் சேவையை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. 
 
பாகிஸ்தானில் இந்த முடிவுக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
 
’இதுவரை எந்த ஒரு அறிவிப்பும், நோட்டீஸும் பாகிஸ்தானிடமிருந்து வரவில்லை அப்படியிருக்க தபால் சேவையை நிறுத்துவதாக பாக்., கூறியுள்ளது சர்வதேச தபால் சேவை விதிகளுக்கு எதிரானது’ என தெரிவித்தார்.
 
சமீபத்தில் மோடி அரசு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துவிட்டு, ஜம்மு- காஷ்மீர் லடாக் ஆகிய பகுதிகளை யூனியன் பிரதேசங்களாக மாற்றுவதாக அறிவித்தது. இந்த முடிவுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.