ஜியோ சர்வர்கள் தற்காலிக முடக்கம்…பயனர்கள் பாதிப்பு
நாடு முழுவதும் இன்று காலை முதல் ஜியோ சர்வர்கள் முடங்கியதால் பயனர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
முகேஷ் அம்பானியால் சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ நெட்வொர்க் இன்று உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது.
ஒரு சாதாரண மனிதன் முதல் பிஸினஸ்மேன் வரை எல்லோரும் இணையதளம் பயன்படுத்த ஜியோ வருகைதான் காரணம். இந்தியாவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் ஜியோ நெட்வோர்க் இன்று காலை முதல் தற்காலிகமாக செயலிழந்துள்ளது.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, சண்டிகர் , பெங்களுர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் ஜியோ நெட்வோர்க்கில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்சனை விரைவில் சமூகமாக தீர்க்கப்படும் என ஜியோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.