திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (15:11 IST)

11 லட்சம் கிமீ 5ஜி நெட்வொர்க்: உலகை 5 முறை சுற்றி வரலாம் என முகேஷ் அம்பானி அறிவிப்பு!

mukesh ambani
11 லட்சம் கிமீ 5ஜி நெட்வொர்க்: உலகை 5 முறை சுற்றி வரலாம் என முகேஷ் அம்பானி அறிவிப்பு!
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ பைபர் ஆப்டிக் மூலம் 11 லட்சம் கிலோ மீட்டருக்கு சேவை தர இருப்பதாகவும் உலக ஐந்து முறை சுற்றி வரும் தூரத்திற்கு சமம் என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்
 
 இன்று முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் 40-வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவில் பேசிய முகேஷ் அம்பானி பல்வேறு அறிவிப்புகளை அறிவித்துள்ளார் 
 
இந்தியாவில் 11 லட்சம் கிலோ மீட்டர் நீளம் கொண்ட பைபர் ஆப்டிக் நெட்வொர்க் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் பைபர் ஆப்டிக் சேவையில் இந்தியாவின் நம்பர் ஒன் நிறுவனமாக ஜியோ விளங்குகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
வரும் தீபாவளி முதல் முக்கிய நகரங்களில் 5ஜி சேவை ஆரம்பிக்கப்படும் என்றும் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் 5ஜி  சேவை இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் உயர்தர சேவை தருவதே தங்களது நோக்கம் என்றும் சலுகை விலையில் பைபர் நெட்வொர்க்கை இந்தியாவில் கொண்டுவர வேண்டும் என்பதே எங்கள் நிறுவனத்தின் இலக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்