செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (20:25 IST)

2வது வழக்கிலும் ஜாமின்: விடுதலை ஆகிறாரா குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி?

jignesh
பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் டுவிட் பதிவு செய்த குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி என்பவரை அசாம் மாநில போலீசார் கைது செய்த நிலையில் அவருக்கு அந்த வழக்கில் ஜாமீன் கிடைத்தது 
 
இந்த நிலையில் ஜிக்னேஷ் மேவானிமீது அசாம் போலீசார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்த நிலையில் இரண்டாவது வழக்கிலும் தற்போது ஜாமீன் கிடைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
இந்த நிலையில் இரண்டு வழக்கில் ஜாமீன் கிடைத்ததை அடுத்து குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி நாளை விடுதலை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
ஆனால் நாளைக்குள் மேலும் ஒரு வழக்கு அவர் மீது பதிவு செய்யப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது