1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 25 டிசம்பர் 2019 (08:28 IST)

குடியுரிமை சட்டத்தை அமல்செய்ய முடியாது: முதல்வராக பதவியேற்கவிருக்கும் ஹேமந்த் சோரன் பேட்டி!

சமீபத்தில் மத்திய அரசு அமல் செய்த குடியுரிமை சீர்திருத்தச் சட்டம் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளிலும் வாக்கெடுப்பில் வெற்றி பெற்று, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றது
 
இருப்பினும் இந்த சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்த முடியாது என ஒரு சில மாநில முதல்வர்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், புதுவை முதல்வர் நாராயணசாமி உள்பட ஒருசில முதல்வர்கள் தங்கள் மாநிலத்தில் இந்த சட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளனர். அதேபோல் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்களும் தன்னுடைய மாநிலத்தில் இந்த சட்டத்தை அமல் செய்ய முடியாது என்று தெரிவித்தார்.
 
இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று வரும் 29ஆம் தேதி முதல்வர் பதவியை ஏற்க உள்ள ஹேமந்த் சோரன் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது குடியுரிமை சட்டத்தை ஜார்கண்ட் மாநிலத்தில் அமல் செய்ய முடியாது என்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து ஒருவரை கூட அகதியாக அல்லது வெளியேற்றவோ தான் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்
 
இதனை அடுத்து குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த முடியாது என்று கூறும் முதல்வர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இருப்பினும் தமிழ்நாடு உள்பட ஒரு சில மாநிலங்கள் இந்த சட்டத்தை அமல்படுத்தும் என தெரிகிறது