வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 24 டிசம்பர் 2019 (22:48 IST)

மோடி, அமித்ஷாவை ஆஹா ஓஹோ என புகழ்ந்த பிக்பாஸ் நடிகை

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரும் சர்ச்சைக்குரியர் என்று கருதப்பட்ட நடிகை மீராமிதுன் சமீபத்தில் மத்திய அரசு அமல் செய்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரையும் ஆகா ஓகோ என்று புகழ்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
இதுகுறித்து மீராமிதுன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியபோது ’இந்திய குடியுரிமை சீர்திருத்த சட்டம் இந்தியாவிற்கு அவசியமான ஒன்று என்றும், நாட்டின் பாதுகாப்புக்கும் நாட்டு மக்களின் நன்மைக்கு இந்த சட்டம் முக்கியமானது என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த சட்டத்தை எதிர்த்து போராடும் அரசியல்வாதிகள் தங்களுடைய சுய விளம்பரத்துக்காக போராடி வருவதாகவும், போராட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
 
மேலும் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகிய இருவரும் இந்த சட்டத்தை மக்களின் நலன் கருதி உருவாக்கியிருப்பதாகவும், எந்த ஒரு சட்டமும் ஆரம்பத்தில் அமல்படுத்தும் போது அது தீங்கு செய்வது போல்தான் தெரியும் என்றும் ஆனால் காலம் போகப் போகத்தான் அந்த சட்டம் மக்களுக்கான சட்டம் என்றும் அந்தச் சட்டத்தின் நன்மை புரிய வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
 
மீராமிதுன் வெளியிட்ட இந்த வீடியோவிற்கு சமூகவலைதள பயனாளிகள் ஆதரவு மற்றும் கண்டன கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்