செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (18:43 IST)

பிரதமரை அடுத்து முதல்வருக்கு கோவில்: எம்.எல்.ஏ கட்டியதால் பரபரப்பு!

பிரதமரை அடுத்து முதல்வருக்கு கோவில்: எம்.எல்.ஏ கட்டியதால் பரபரப்பு!
பிரதமர் மோடிக்கு கோயில் கட்டியதாக இணையதளங்களில் வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எம்எல்ஏ ஒருவர் கோயில் கட்டியதாக செய்திகள் வெளியாகிஉள்ளது 
 
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அவருடைய கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ மதுசூதன ரெட்டி என்பவர் கோயில் கட்டியுள்ளார். சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளகஸ்தியில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது 
 
இந்த கோவிலுக்கு தற்போது பொதுமக்கள் வந்து செல்வதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன இது குறித்து எம்எல்ஏ மதுசூதனன் தனது டுவிட்டரில் ஜெகன்மோகன் ரெட்டி பல முதல்வர் அவர்களை விட நன்றாக செயல்பட்டு வருகிறார். ஏழை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அவரால் கொண்டுவரப்பட்ட நவரத்தினலு திட்டம். இந்த திட்டத்தை மக்களுக்கு மிகப்பெரிய அளவில் எடுத்துரைக்கும் வகையில் இந்த கோவிலை கட்டி உள்ளோம் என்று தெரிவித்துள்ளார் இந்த கோவிலின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது