செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (09:57 IST)

ஏற்கனவே இருக்கும் அர்ச்சகர்கள் வெளியேற்றப்படுவார்களா? அமைச்சர் சேகர்பாபு தகவல்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் சமீபத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் 58 புதிய அர்ச்சகர்களை நியமனம் செய்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஏற்கனவே இருக்கும் அர்ச்சகர்கள் வெளியேற்றப்படுவார்களா என்ற கேள்விக்கு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் விளக்கம் அளித்துள்ளார் 
 
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தில் யாரும் உயர் நிலைக்கு வரக் கூடாது என சிலர் விஷமத்தனமாக செயல்படுகின்றனர் என்றும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தில் 58 பேர் பணி நியமனம் செய்யப்பட்டது குறித்து சிலர் தவறான பிரசாரம் செய்து வருகிறார்கள் என்றும் கூறினார் 
 
கோயில்களில் ஏற்கனவே பணியில் இருக்கும் அர்ச்சகர்கள் யாரையும் வெளியேற்றும் திட்டம் இல்லை என்றும் இது குறித்து வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். புதிதாக நியமனம் செய்யப்பட்ட அர்ச்சகர்களும் ஏற்கனவே பணியில் உள்ள அர்ச்சகரும் செயல்படுவார்கள் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்