1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (08:45 IST)

அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி எப்போது?

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் அனுமதிக்கப்படுவது எப்போது என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது 
அயோத்தியில் பிரமாண்டமாக தற்போது ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. 5 கால் மண்டபம் உள்பட பல்வேறு தளங்கள் கட்டப்பட்டு வரும் நிலையில் இந்த பணி 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
100 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் இந்த கோவிலில் செங்கல் கம்பிகள் இல்லாமல் கருங்கற்கள் மற்றும் வெண்கலத்தால் கட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் 5 லட்சம் பக்தர்கள் திரளும் வகையில் அமைக்கப்பட்டு வரும் இந்த கோவில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்கு 3000 கோடி நிதியாக பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ராமர் கோவில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பக்தர்களுக்காக திறக்கப்படும் என்றும் ராமர் கோயில் கட்டும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்