1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 ஜூன் 2022 (14:28 IST)

வங்கி மேனேஜர் சுட்டு கொலை: பட்டப்பகலில் நடந்த கொடூரம்

gunshot
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பட்டப்பகலில் வங்கி மேனேஜர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குல்காம் என்ற மாவட்டத்தில் வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து கொண்டிருந்த ராஜஸ்தானை சேர்ந்த விஜயகுமார் என்பவரை வங்கிக்குள் புகுந்த தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டுக் கொன்றனர் 
 
அதன் பிறகு அவர்கள் மின்னலாய் தப்பிச் சென்றுவிட்டனர். துப்பாக்கி குண்டுகளால் படுகாயமடைந்த விஜயகுமார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் 
 
நேற்று ஜம்மு காஷ்மீரில் பள்ளி ஆசிரியர் ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இன்று வங்கி மேனேஜர் சுட்டுக்கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது