திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 30 மே 2022 (15:58 IST)

கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 813 வங்கி கணக்குகள் முடக்கம்!

bank
கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 813 வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது
 
 மதுரை திண்டுக்கல் விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கஞ்சா வேட்டை நடைபெற்றது 
 
இந்த வேட்டையில் பல நபர்கள் பிடிபட்டார்கள் என்ற நிலையில் பிடிபட்ட நபர்களின் தொடர்புடைய வங்கி கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டது
 
இந்த நிலையில் தற்போது இந்த வழக்குகளில் தொடர்புடைய 813 வங்கி கணக்குகள்  முடக்கம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
தமிழகம் முழுவதும் 494 வழக்குகளில் 813 வங்கி கணக்குகள் தொடர்பு இருப்பதால் கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது