செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (14:48 IST)

மரங்களுக்கு ராக்கி கட்டிய மாணவர்கள்! – உ.பியில் விநோத முயற்சி!

இன்று நாடு முழுவதும் ரக்‌ஷபந்தன் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் உத்தர பிரதேச மாணவர்கள் மரங்களுக்கு ராக்கி கட்டிவிட்ட சம்பவம் ட்ரெண்டாகியுள்ளது.

இன்று நாடு முழுவதும் ரக்‌ஷாபந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. எனினும் கொரோனா தாக்கம் இருப்பதால் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்து வீடுகளில் இந்த பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்த பண்டிகையின் போது ஆண்களும், பெண்களும் தங்கள் சகோதார, சகோதரிகளாக எண்ணுவோருக்கு ராக்கி அணிவிப்பது வழக்கம்.

இன்று பலர் தங்கள் சகோதர சகோதரிகளுக்கு ராக்கி கட்டிவிட்டு கொண்டாடி வரும் நிலையில் உத்தர பிரதேசத்தில் மாணவர்கள் மரங்களுக்கு ராக்கி கட்டியுள்ளனர். மனிதர்கள் வாழ இயற்கையின் அவசியத்தையும், அதே சமயம் மரங்கள் வளர்ப்பதன் அவசியத்தையும் வலியுறுத்துவதற்காக இந்த நூதன முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பீகார் முதல்வரும் தங்கள் மக்களிடம் மரங்களுக்கு ராக்கி கட்டுங்கள் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.