ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 1 மே 2023 (19:40 IST)

ரஜினிகாந்தை விமர்சித்ததற்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்- சந்திரபாபு நாயுடு

நடிகர் ரஜினிகாந்த்தை,  ரோஜா உள்ளிட்டோரை விமர்சித்ததற்கு  முதல்வரும், ஒயெஸ்.ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோஜன் ரெட்டி மன்னிப்பு கேட்க வேண்டுமென்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

சில நாட்களுக்கு முன், முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் 100 வது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபுவுக்கு ஆதரவாகப் பேசினார்.

இதையடுத்து, புதுச்சேரி, திருக்காஞ்சியில் நடைபெற்று வரும் புஷ்கரணியி  விழாவில் கங்கா ஆரத்தியில் கலந்துகொள்ள வந்திருந்த ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், ரஜினி சார் இன்று பேசியதைப் பார்த்து என்.டி.ஆர் ரசிகர்கள் கோபத்தோடு இருக்கிறார்கள். ரனினிசார் டாப்ல்…அதுக்கு மேல ஒரு ஐடியாவில் இருப்போம். இன்றைக்கு ஜீரோ ஆகிவிட்டார் என்று கூறினார்.

இந்த நிலையில், ரஜினிகாந்தை,ரோஜா விமர்சித்ததற்கு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: ‘’ஜெகன் மோகன் ரெட்டி தன் கட்சியினரை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மீது ரஜினி எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை;  தேவையில்லாத விமர்சனங்களை தெலுங்கு மக்கள் ஏற்க மாட்டார்கள்’’ என்று கூறினார்.