சந்திரபாபு நாயுடுவை சந்தித்த ரஜினிகாந்த்! – ஆந்திர அரசியலில் ஆர்வமா?
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று சந்தித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் படம் ரஜினிகாந்தின் 169வது படம் ஜெயிலர். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் மோகன்லால் உள்ளிட்ட பலர் நடிக்கும் நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஹைதராபாத்தில் விருவிருப்பாக நடந்து வருகிறது.
படத்தின் 65 சதவீத பணிகள் முடிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் ஷூட்டிங் முடிந்து ஐதராபாத்தில் உள்ள ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார் ரஜினிகாந்த்.
அவரை பொன்னாடை போர்த்தி வரவேற்ற சந்திரபாபு நாயுடு அவருடன் எடுத்த போட்டோவை தற்போது ட்விட்டரில் பகிர்ந்து “என் அன்பு நண்பர் 'தலைவர்' ரஜினிகாந்தை சந்தித்து உரையாடியதில் மகிழ்ச்சி” என்று பதிவிட்டுள்ளார். இருவரும் சந்தித்துக் கொண்டபோது பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டதோடு, இருமாநில அரசியல் குறித்தும் பேசியிருக்கலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது.
Edit by Prasanth.K