திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (13:08 IST)

ஆளில்லாத காபி கடையை வாங்க போட்டி போடும் நிறுவனங்கள்: சரிந்த சாம்ராஜ்யம்

இந்தியாவின் பழம்பெரும் காபி கஃபே டே நிறுவனத்தை வளைத்து போட நாள் பார்த்துக் கொண்டிருக்கின்றன பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள்.

இந்தியாவில் சிறிய அளவில் தொடங்கி உலகமெல்லாம் கிளை பரப்பி வளர்ந்திருக்கும் மிகப்பெரிய நிறுவனம் காபி கஃபே டே. 23 வருடங்களுக்கும் மேலாக 6 நாடுகளில் பிரபலமாக இருந்து வருகிறது இந்த நிறுவனம். இதன் உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்தா தொழில்ரீதியான பிரச்சினைகளால் சென்ற மாதம் தற்கொலை செய்துக் கொண்டார்.

சித்தார்த்தா மறைவுக்கு பிறகு காபி கஃபே டே பல்வேறு சிக்கல்களை எதிர் கொண்டிருப்பதாக தெரிகிறது. தற்போது உலகம் முழுவது 20 ஆயிரம் தொழிலாளர்களை கொண்டு இயங்கி வரும் காபி டே எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மதிப்பு 43 பில்லியன் ரூபாயாக இருக்கிறது. சித்தார்த்தா மறைவுக்கு முன்னரே பல கார்ப்பரேட் நிறுவனங்கள் காபி டேயை வாங்கி கொள்ள முயற்சித்து வந்தார்கள்.

தற்போது அவர் இல்லாததால் பல நிறுவனங்கள் காபி டேவுக்காக போட்டியிடுகின்றன. ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு காபி டே பங்குகளை வாங்க கோகோ கோலா நிறுவனம் முயற்சி செய்தது. இந்நிலையில் இந்தியாவின் பிரபல உணவுப்பொருட்கள் நிறுவனமான ஐடிசி-யும் காபி டேயை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது.

சமீபத்தில் காபி டே நிறுவனத்தின் பங்குகள் மற்றும் வர்த்தக கணக்கு வழக்குகளை பார்வையிட்டுள்ளது ஐடிசி நிறுவனம். காபி டே நிறுவனத்தை வாங்குவது குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் ஐடிசி தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.