செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 27 டிசம்பர் 2023 (13:09 IST)

ராகுல் காந்தியின் நடைப்பயணம் அறிவிப்பு

RahulGandhi
2024 ஆம் ஆண்டு இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதில், பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராகி வரும் நிலையில்,  கட்சியை பலப்படுத்த ராகுல் திட்டமிட்டார்.
 

அதன்படி, இந்திய காங்கிரஸ் ‘பாரத  ஒற்றுமை யாத்திரை' என்ற பெயரில்  காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தலைமையில்  கடந்தாண்டு கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை யாத்திரை தொடங்கப்பட்டது.

இந்த நடைபயணத்தில் ராகுல்காந்தியுடன் 118 காங்கிரஸ் உறுப்பினர்கள் நடைபயணமாக செல்ல உள்ளனர். இந்த 118 பேரும் தங்குவதற்கு சகல வசதிகளுடன் 60 கேரவன்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.

ராகுல்காந்தி மற்றும் 118 பேருக்கு பாதுகாப்பாக பாதுகாப்பு குழு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த யாத்திரை தமிழகம், கர்நாடகம், பெங்களூரு, தெலங்கானா ஆகிய மாநிலங்களை கடந்து வெற்றிகரமான மக்கள் மத்தியிலும், மீடியாவிலும் பேசப்பட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  ஜனவரி 14 முதல் மார்ச் 20 ஆம் தேதிவரை ராகுல் காந்தி மீண்டும் நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக மல்லிகார்ஜூன கார்கே தலைமையிலான காங்கிரஸ் அறிவித்துள்ளது.

அதில், 'பாரத் நயா யாத்ரா' என்ற பெயரில் நடைப் பெயரில் நடைப்பயணத்தை அறிவித்துள்ளது. இந்த நடைப்பயணம் மணிப்பூரில் இருந்து மும்பை வரை இந்தியாவின் கிழக்கிலிருந்து மேற்கு வரை 14  மாநிலங்கள் வழியாக நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.