1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. It is reported that a suicide attack is planned on Ayodhya Ram Temple!

அயோத்தி ராமர் கோயில் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த திட்டமா? அதிர்ச்சி தகவல்!

ramar temple
அயோத்தி ராமர் கோவில் மீது தற்கொலை படைகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்தி கசிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
 அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வரும் நிலையில் இந்த கோயில் விரைவில் திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பு ஒன்று நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழைய திட்டமிட்டுள்ளதாகவும் அந்த கும்பல் ராமர் கோவில் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியுள்ளதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
இதனை அடுத்து அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
சீனாவில் குறைந்தது மக்கள் தொகை குறைந்ததற்கு என்ன காரணம்?