திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (09:26 IST)

தனியார்மயமாக்கப்படுகிறதா இஸ்ரோ? – சிவன் விளக்கம்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் தனியார் பங்களிப்பிற்கு அனுமதி அளிக்கபட்டுள்ள நிலையில் இஸ்ரோ தனியார்மயமாக்கப்படுமா என்பது குறித்து சிவன் விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவில் மத்திய அரசு பல்வேறு தொழில்நுட்ப முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் மத்திய அரசின் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் தனியார் பங்களிப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இஸ்ரோ தனியார்மயமாக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்தது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள இஸ்ரோ தலைவர் சிவன் ”தனிநபர்கள் விண்வெளி சார்ந்த செயல்பாடுகளில் பங்கேற்கவும், அதன்மூலம் விண்வெளி அறிவியலில் முன்னேற்றத்தை அடையவுமே தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ தனது வளங்களை சிறப்பாக பயன்படுத்தவே இந்த முயற்சியே தவிர, கண்டிப்பாக இஸ்ரோ தனியார்மயமாக்கப்படாது. விண்வெளி ஆய்வில் இந்தியா புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தனியார் நிறுவனமான டெஸ்லாவின் பங்களிப்புடன் நாசா விண்வெளிக்கு வீரர்களை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.