செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (12:08 IST)

ட்ரீம் லெவனுக்கு ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப் அளித்த விவகாரம்! – ட்ரேடர்ஸ் யூனியன் கண்டனம்!

ஐபிஎல் போட்டிகளுக்கான டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப் ட்ரீம் லெவனுக்கு அளிக்கப்பட்டுள்ளதற்கு ட்ரேடர்ஸ் யூனியன் கண்டனம் தெரிவித்துள்ளது.

சீனா – இந்தியா எல்லை மோதலுக்கு பதலடி தரும் விதமாக சீன பொருட்கள், செயலிகளை இந்தியா தடை செய்து வருகிறது. இந்திய வணிகர்கள் பலரும் சீன பொருட்களை தவிர்க்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்கு சீன மொபைல் நிறுவனமான விவோ டைட்டில் ஸ்பான்சராக இருந்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் விவோ ஸ்பான்சர்ஷிப்பிலிருந்து நீக்கப்பட்டது.

அதை தொடர்ந்து டைட்டில் ஸ்பான்சருக்கு பதஞ்சலி உள்ளிட்ட நிறுவனங்கள் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ஆனலைன் விளையாட்டு நிறுவனமான ட்ரீம் லெவன் ஒரு ஆண்டு ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பை பெற்றுள்ளது. இதற்கு இந்திய ட்ரேடர்ஸ் யூனியன் கண்டனம் தெரிவித்துள்ளனர். ட்ரீம் லெவன் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருப்பவர்களும், முதலீடு செய்பவர்களும் சீனர்களே என்று தெரிவித்து அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது ட்ரேடர்ஸ் யூனியன்.