செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 4 ஜனவரி 2022 (07:55 IST)

வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன்

வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் சுகன்யா திட்டம் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்டமாக வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்யும் திட்டம் இருப்பதாக இஸ்ரோ தலைவர் இன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 
 
முதல் கட்டமாக இந்த ஆண்டு ஆளில்லா முதல் பயணத்தை தொடங்க இருப்பதாகவும் இதற்காக விகாஸ் இன்ஜின், கிரையோஜனிக் ஸ்டேஜ் குரு எஸ்கேப் சிஸ்டம் ஆகிவற்றை சோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்
 
மேலும் இந்திய வீரர்கள் இதற்கான விண்வெளி பயிற்சியை ரஷ்யாவில் முடித்து விட்டதாகவும் சூரியனுக்கான இந்திய விண்கலமான ஆதித்யா எல்1 முதற்கட்ட சோதனை முடிந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்