1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Heavy rain chances In 4 districts

4 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

Tamilnadu
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சியால் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்று 4 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சியால் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. நேற்று முன்தினம் சென்னையில் எதிர்பாராத விதமாக திடீர் கனமழை பெய்தது. தொடர்ந்து நேற்று முதலாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடற்கரையோர மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வளிமண்டல சுழற்சி காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
இந்த ஆட்சியில் போலீசாருக்கே பாதுகாப்பில்லை! – ஓபிஎஸ் குற்றச்சாட்டு!