செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (12:19 IST)

வீடு திரும்பினார் அமித்ஷா – மருத்துவமனை வட்டாரம் தகவல்!

இந்தியாவின் உள்துறை அமைச்சரான அமித்ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை வீடு திரும்பியதாக சொல்லப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சில நாட்கள் முன்னர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் மூன்று முறை சோதனை செய்யப்பட்டு அவருக்கு கொரோனா இல்லை என கூறப்பட்டதால் வீடு திரும்பினார். பின்னர் ஆகஸ்ட் 18 ஆம் தேதி மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு கடந்த 12 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த அமித்ஷா குணமாகி இன்று காலை வீடு திரும்பியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.