வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (15:42 IST)

பட்டம் வாங்கி தறேன் வா ராஜா; கடத்தப்பட்ட குழந்தை! – 24 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்!

பட்டம் வாங்கி தருவதாக கூறி தொழிலதிபர் மகனை கடத்திய கும்பலை 24 மணி நேரத்தில் பெங்களூர் போலீசார் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு நகரில் உள்ள சிவாஜி நகரை சேர்ந்த தொழிலதிப்ரின் 11 வயது மகன் முகம்மது உமர் சாலையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் பட்டம் வாங்கி தருவதாக கூறி சிறுவனை கடத்தியுள்ளனர். பிறகு தொழிலதிபருக்கு போன் செய்து 2 கோடி ரூபாய் பணம் கொடுத்தால் சிறுவனை விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து தொழிலதிபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உடனடியாக இதுகுறித்து தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் தும்கூர் பகுதியில் கடத்தல்காரர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் கடத்திய கும்பலில் ஒருவர் தொழிலதிபருக்கு தெரிந்தவர் என்பதும், திட்டமிட்டு மகனை கடத்தி பணம் பறிக்க முயன்றதும் தெரிய வந்துள்ளது.

சிறுவன் கடத்தப்பட்டு 24 மணி நேரத்தில் போலீஸார் மீட்ட நிலையில் காவல்துறைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.